ஜெனரலுக்கு குசுபோனாலும் ஊடகவியலாளர் மாநாடு நடத்துகிறது ஜேவிபி. விமல் வீரவன்ச
ஜேவிபி யின் முன்னாள் பிரச்சார செயலாளர் ஜேவிபி ஜெனரல் பொன்சேகாவை விற்றுப்பிழைப்பதாக தெரிவித்துள்ளார். நுகேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரமேடை ஒன்றில் பேசிய அவர், ஜெனரல் பொன்சேகாவின் உடல் நிலைமை மோசம் என தெரிவித்து தேர்தல் நெருங்கும் நாட்களில் அவரை வைத்திசாலை ஒன்றுக்கு தள்ளி அதன் மூலம் மக்களின் அனுதாப வாக்குகளை பெற ஜேவிபி முயல்வதாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், எதிர்கால அரசியல் தொடர்பாக பேசுவதற்கு ஜேவிபி யினரிடம் எதுவும் இல்லை. அந்த நிலையில் ஜெனரலுக்கு குசு போனாலும் ஊடகவியலாளர் மாநாடு, கொட்டாவி போனாலும் ஊடகவியலாளர் மாநாடு என ஜேவிபி வங்கரோத்து அரசியல் நடாத்தி வருகின்றது என்றார்.
0 comments :
Post a Comment