Thursday, April 1, 2010

நித்யானந்தா மீது அமெரிக்காவில் வழக்கு

அமெரிக்காவில், பக்தர்களுக்கு போதை மருந்து கொடுத்து ஏமாற்றியதாக நித்யானந்தா மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரமத்தின் மூலம் பக்தர் அளித்த நிதியை மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தியான பீடம் எனும் பெயரில் ஆசிரமங்களை அமைத்து, பக்தர்களுக்கு நித்யானந்தா அருளாசி வழங்கி வந்தார். இதனிடையே நடிகை ரஞ்சிதாவோடு நெருக்கமாக நித்யானந்தா இருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதனால் பலவிதமான சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், நித்யானந்தா ஆசிரம பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், நித்யானந்தா மீது அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பக்தராக இருந்த டக்ளாஸ் மெக்கல்லர் என்பவர் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நித்யானந்தாவை 2007ம் ஆண்டு சந்தித்து 4 லட்சம் டாலர் நிதி கொடுத்து ஆசிரமத்தில் சேர்ந்ததாகவும், அதன் பிறகு தனது பெயரை நித்யபிரபா என்று மாற்றிக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆசிரமத்தில் இருந்த போது நித்யானந்தா தனக்கு போதை பொருளை கொடுத்து மயக்கியதாக கூறியுள்ள அவர் ஆசிரம நிதியை நித்யானந்தா மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.

நித்யானந்தா அழகான இளம்பெண்களை விரும்பி வசியம் செய்ததாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment