Bell 212 ரக ஹெலிக்கொப்டர்களிலிருந்து துண்டுப்பிரசுரங்கள் வீசப்படுகின்றன.
ஆழும் கட்சியின் குருநாகல் மாவட்ட வேட்பாளர்களான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்று அரசுடன் இணைந்து அமைச்சுப்பதவியைப் பெற்றுக்கொண்டுள்ள ஜோன்ஸ்ரன் பெர்ணாந்து மற்றும் பிரதி சுகாதார அமைச்சர் ஜெயரத்ன கேரத் ஆகியோர் தமது தேர்தல் பிரச்சார துண்டுப்பிரசுரங்களை பெல் 212 ரக ஹெலிகொப்டர்களில் தாழப்பறந்த வீசி வருகின்றனர். குறிப்பிட்ட ஹெலிக்கொப்டர்களின் பாவனைக்கு மணித்தியாலயம் ஒன்றுக்கு 2150 அமெரிக்க டொலர்கள் பயன்படும் என தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment