8 பிக்குகள் பிணையில் விடுதலை.
ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரம் இருந்த பிக்குகள் 12 பேரை நேற்று பொலிஸார் பலவந்தமாக அவ்விடத்திலிருந்து தூக்கிச் சென்றிருந்தனர். அவர்களில் 8 பேர் நேற்றிரவு மஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு 50000 ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் இன்று பிற்பகல் கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் அங்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment