மீள் குடியேற்றம் 6 மாத காலப்பகுதியினுள் முடிவடையும் : புதிய மீள்குடியேற்ற அமைச்சர்.
வன்னியின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களில் இதுவரை குடியமர்த்தப்படாத சுமார் 70,000 பேரும் இன்னும் ஆறு மாத காலத்தினுள் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என, இலங்கையின் புதிய மீள் குடியேற்ற அமைச்சராக பதிவியேற்றுள்ள மில்ராய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இடைத்தங்கல் முகாம்களுக்குச் சென்று அங்கு உள்ளவர்களைச் சந்தித்த அமைச்சர், வவுனியாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு ஒரு சிலருக்கு மாத்திரமே கிடைத்து உள்ளது. பல வீடுகள் முற்றாக அழிந்திருப்பதனால், மக்கள் தற்காலிக வீடுகளில் மூன்று நான்கு குடும்பங்களாகச் சேர்ந்து வசிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். இவர்களுக்கு குடியேற்ற அமைச்சின் கீழ் புதிய வீடுகளை அமைத்துத்தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்ணி வெடி அகற்றும் வேகத்திற்கு ஏற்ப குடியேற்ற நடவடிக்கைகள் துரிதமாக நடக்கும் என தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்தோர் பகுதிகளில் கண்ணி வெடிகள் இல்லை எனில் நாளையே அனைவரையும் குடியேற்றம் செய்து விடலாம், எனவும் அவர் மேலும் கூறினானார்.
இதற்கிடையே கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களுக்குப் புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பில் ஆராய இந்திய அதிகாரிகள் குழுவொன்று அந்தப் பகுதிகளுக்குச் சென்று இரு நாட்களில் நிலைமைகளை நேரடியாக ஆராய்ந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment