பாகிஸ்தானில் அகதிகள் முகாம்களில் தற்கொலை தாக்குதலில் 63 பேர் பலி
பாகிஸ்தானில் அகதிகள் முகாம்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 63 பேர் பலியாயினர். பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மலை பகுதிகளில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. எனவே அங்கு குடியிருக்கும் பொது மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
கோகட் நகரம் அருகே கச்சாபுகா என்ற இடத்தில் அமைக்கப்பட்ட முகாம் அலுவலகத்தில் தங்கள் பெயரை பதிவு செய்ய மக்கள் வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 63 பேர் பலியானார்கள். 98 பேர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் ஓரக்காய் மாவட்டத்தைச் சேர்ந்த மணிஹெல், பாரமத் ஹெல் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்த தாக்குதலுக்கு லஸ்கர்-இ-ஜாங்வி அல்- அலாமி என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
0 comments :
Post a Comment