புதிய பொலிஸ் பயிற்சிக் கல்லூரி திறப்பு : 6000 பொலிஸாருக்கு தமிழ் மொழிப்பயிற்சி.
நீர்கொழும்பு கட்டானைப் பிரதேசத்தில் நேற்று புதியதோர் பொலிஸ் பயிற்சி கல்லூரி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச பிரத விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியை உத்தியோக பூர்மாக திறந்து வைத்தார். நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, வீசேட அதிரடிப்படையின் தளபதி டிஐஜி சரத் சந்திர மற்றும் பல உயரதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சேவையாற்றும் ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழி பயிற்சிகளை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார். இவ்வாறான பயிற்சி வழங்குவதன் மூலம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான சிறந்த சேவைகளை பொலிஸாரால் வழங்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் மேலும் உரையாற்றுகையில், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சேவையாற்றும் பொலிஸாருக்கு இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது.
மூன்று மாதங்களுக்கு 300 பேர் என்ற அடிப்படையில் ஐந்து வருடத்திற்கு ஆறாயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும். பொலிஸாரின் தொழில் ரீதியான ஆளுமைகளை மேம்படுத்துவதே பிரதான நோக்கமாகும். இந்த பொலிஸ் அகடமியை இதற்கு உச்ச அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். களணி பல்கலைக்கழகத்துடன் இந்த பொலிஸ் அகடமியை இணைத்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொலிஸாருக்கான விசேட புலனாய்வு கற்கை நெறி ஒன்று நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன், இக்கற்கை நெறிக்கு 200 உத்தியோகித்தர்கள் முதற்தடவையாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment