வாக்கு பதிவு நிறைவுற்றது : 55% வாக்களிப்பு வன்செயல்கள் இல்லை.
நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் 37 வாக்களிப்பு நிலையங்களிலும் திருகோணமலை மாவட்டத்தில் கும்புறுப்பிட்டி வாக்களிப்பு நிலையத்திலும் இன்று நடைபெற்ற மீள் வாக்களிப்பு மிகவும் அமைதியாக இடம்பெற்றதாகவும் 55 சதவீத வாக்களிப்பு பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் 4:00 மணிக்கு வாக்களிப்பு முடிவுற்றது. இன்றைய வாக்களிப்பின்போது எவ்விதமான தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் இடமபெறவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment