புத்தாண்டு விபத்துக்கள் மூவர் பலி 486 பேர் காயம்.
போக்குவரத்து சட்டவிதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை.
புத்தாண்டு தினமான 13ம் 14ம் திகதிகளில் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவில் 486 பேர் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள விபத்துச் சேவைப் பிரிவின் இயக்குனர் டாக்டர் ஆரியவன்ச, மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்துக்களில் அதிகமானவை மதுபோதையில் வாகனம் செலுத்தியமையாலேயே இடம்பெற்றள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போக்குவரத்து சட்டவிதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை.
இலங்கையில் மோட்டார் போக்குவரத்து சட்ட விதிகளை மீறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து சட்டங்கள் குறித்து போதிய தெளிவின்மை மற்றும் சட்டங்கள் தொடர்பான உதாசீனப் போக்கு ஆகியவையே அதிகளவு குற்றங்கள் இடம்பெறக் காரணம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் பி.விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
அண்மைய ஆண்டுகளில் பல பாதைகள் புனரமைக்கப் பட்டுள்ளதாகவும் இதனால் பாதைகளில் செல்லக் கூடிய வேகக் கட்டுப்பாடுகளும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த வேகக் கட்டுப்பாடு தளர்வினை அநேக சாரதிகள் துஸ்பிரயோகம் செய்வதாகவும் வாகனங்களை மிக வேகமாக செலுத்துவதனால் நாளாந்தம் விபத்துச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாள் தோறும் இடம்பெறும் விபத்துக்களின் மூலம் சாராசரியாக 6 பேர் வரையில் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக அதிகளவானோர் காயமடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வீதி போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய ஓர் கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment