சீன நிலநடுக்கம் : 400 பேர் பலி, 8,000 பேர் காயம்!
சீனாவின் வடமேற்கு மாகாணமான கியுங்காயில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 8,000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சீன நேரப்படி இன்று காலை 7.49 மணிக்கு சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.
அதன்பிறகு ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்த நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், அதில் ஒன்று 5.8 ரிக்டர்களாக பதிவாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கங்களையடுத்து கட்டடங்கள் பல இடிந்து விழுந்துள்ளதாகவும், இதுவரை சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் சுமார் 8,000 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், பள்ளிச் சிறுவர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது
0 comments :
Post a Comment