பிரிட்டனில் அடைக்கலம் கோருவோர்களில் 4 ஆம் இடத்தில் இலங்கை பிரஜைகள்
பிரிட்டனில் அடைக்கலம் கோருவோரில் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் நான்காம் இடத்தை வகிப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு 1430 இலங்கையர்கள் பிரித்தானியாவில் அடைக்கலம் கோரியுள்ளனர். இந்த தொகை முந்தைய வருடங்களை காட்டிலும் குறைவானது என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை ஜிம்பாப்வே நாட்டினர், பிரிட்டனில் அடைக்கலம் கோருவோர் பட்டியலில் முதலிடத்தை வகிக்கின்றனர். 2009 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் அடைக்கலம் கோரிய ஜிம்பாப்வே நாட்டவர்களின் எண்ணிக்கை 7420 ஆகும்.
இதற்கு அடுத்தப்படியாக ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆண்டில் 3520 பேர் பிரிட்டனில் அடைக்கலம் கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment