ஜனாதிபதி 22ம் திகதி பாராளுமன்றில் பேசமாட்டார். ரத்தனசிறியே பிரதமர்.
ஏழாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வு எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இவ்வமர்வின் போது ஜனாதிபதி விசேட உரையொன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்தார். அந்நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் வியாழக்கிழமை சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பிர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்வர்.
அதே நேரம் புதிய பிரதம மந்திரி பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச கண்வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்துடன் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இருவர் தொடர்பாகவும் இவ்விடயத்தில் வதந்திகள் பரவியிருந்தது. அனால் முன்னாள் பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயக்கவே புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. புதிய சபாநாயகராக ஜனாதிபதியின் சகோதரர் சமால் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார்.
0 comments :
Post a Comment