2011 இறுதியினுள் ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும். USA
வரும் ஆகஸ்ட் மாதத்துடன் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் நிறுத்திக்கொள்ளப்படும் என்றும் அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்க இராணுவ வீரர்கள் அனைவரும் நாடு திரும்பி விடுவார்கள் என்றும் அந்நாட்டு துணை அதிபர் ஜோ பிடேன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், அல்-கய்தாவின் ஈராக்கிய தலைவர்கள் 2 பேரை அமெரிக்க இராணுவம் கொன்றதற்காக அவர்களை பாராட்டுகிறேன் என்றார்.
ஈராக்குடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி நாங்கள் 2011ஆம் ஆண்டு இறுதியில் ஈராக்கில் இருந்து அனைத்து அமெரிக்க வீரர்களையும் திரும்ப பெற்று விடுவோம் என்றும் வருகிற ஆகஸ்ட் இறுதியுடன் சண்டைபோடுவதை அமெரிக்க வீரர்கள் நிறுத்தி விடுவார்கள் என்றும் கூறினார்.
இராணுவ ஒத்துழைப்பு முடிந்துபோனாலும், ஈராக் மக்களோடும், அரசாங்கத்தோடும் எங்களது நட்புறவும், ஒத்துழைப்பும் தொடரும் என்று கூறிய ஜோ பிடேன், ஈராக்கின் பொருளாதாரத்தை வலுவுள்ளதாக மாற்ற நாங்கள் உதவுவோம் என்றார்.
0 comments :
Post a Comment