பொன்சேகாவுக்கு எதிராக 2வது புதிய இராணுவ நீதிமன்றம் : ஜனாதிபதியினால் நியமனம்.
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் அடங்கிய இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தை புதிதாக நியமித்துள்ளார்.
இந்த நீதிமன்றத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் எம். பி. மீரிஸ¤ம், உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் எஸ். டபிள்யூ. எல். தவுளகள, மேஜர் ஜெனரல் எம். ஹதுருசிங்க ஆகியோரும் இந்த நீதிமன்றத்தின் நீதிபதி அட்வகேட்டாக கடற்படையைச் சேர்ந்த ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னாண்டோவும் புதிதாக நியமிக்கப்பட்டு ள்ளனர்.
இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் அமர்வும், ஏற்கனவே கூடிய முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வும் நாளை 6ம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்தது.
இராணுவக் கொடுக்கல் வாங்கல்கள், மற்றும் இராணுவ விதிமுறைகளை மீறியமை என்று குற்றச்சாட்டு தொடர்பாகவே இந்த இரண்டாவது நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுக்வுள்ளது. ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சென்ற மார்ச் மாதம் 17ம் திகதி கூடிய போது அதன் அமர்வுகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதணையடுத்து மீண்டும் புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றம் நாளை மீண்டும் கூடவுள்ளது என்று இராணுவ தலைமையகம் தெரிவித்தது.
0 comments :
Post a Comment