ஜெயசூரியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஆர்ப்பாட்டம். 18 பேர் கைது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட வேட்பாளரும், இலங்கையின் கிரிக்கட் அணியைச் சேர்ந்தவருமான சனத் ஜெயசூர்யா விளையாடி வருகிறார். இவர் இவ்வணியில் விளையாடுவதை கண்டித்து புதிய தமிழகம் கட்சியை சேரர்ந்தோர் சென்னை மெமோரியல் அரங்கின் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நாடாத்தினர். அப்போது ஜெயசூர்யாவிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஜெயசூரியா சென்னை போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினால் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அமையும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி கடந்த மாதம் தனது பேட்டிஒன்றில் தெளிவுபடுத்திருந்ததுடன் இதையும் மீறி சென்னையில் விளையாட வந்தால் தனது கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாவட்டம் சார்பில் விமான நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சென்னை மாவட்ட அமைப்பு செயலர்கள் ராஜேந்திர பிரசாத், பத்மநாபன், விமல்குமார் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
0 comments :
Post a Comment