Tuesday, April 20, 2010

இத்தாலியில் 17/04/2010இல் இடம்பெற்ற மரணம் (கொலை) தொடர்பான முக்கிய அறிவித்தல்.

இத்தாலி தேசத்தில், பிஸ்தோயா (Lamporecchio(Pistoia)- Italy.) என்னும் இடத்தில் வாழ்ந்த “இராமன் விஜயலக்ஸ்மி” என்னும் 36 வயதுடைய கிளிநோச்சியை பிறப்பிடமாகக் கொண்ட பெண் 17/04/2010 வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு மரணமடைந்துள்ளார் என இத்தாலிய காவல் மற்றும் இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பெண்தொடர்பான மேலதிக காரியங்களை மேற்கொள்வதற்கு அதாவது, மரணவீட்டுக் காரியங்களை நடாத்துவதற்கு உரித்துடையவர்கள், அல்லது, இப்பெண்ணுடைய உறவினர்களின் தகவல் தெரிந்தவர்கள் அவர்களுக்கு இச்செய்தியினை அறிவித்து எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். அல்லது, நேரடியாக இத்தாலியில் உள்ள இலங்கைத்தூதராலயத்துடன் அணுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.


இத்தாலியில் உள்ள இலங்கைத்தூதராலயத்தின் வேண்டுகோளுக்கிணங்க

UNGA “ஒருங்கிணைந்த புதிய தலைமுறை ஒன்றியம்”
இத்தாலிய பணிமனை
மக்கள் சேவைப்பிரிவு
இத்தாலி -TP+39 3346708523 / +39 3204031624 (Mrs.Shana)
Mail - arugan@hotmail.it

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com