16 ம் திகதி நாவலப்பிட்டியில் மீண்டும் தேர்தல்.
நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற தேர்தல் தேர்தல்கள் ஆணையாளரினால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. கண்டிமாவட்டத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் பல தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றதாக கட்சிகள் மற்றும் சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து தேர்தல் ஆணையாளரால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 16ம் திகதி நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
அதே நேரம் திருமலை மாவட்டத்தின் திருகோணமலை தேர்தல் தொகுதியில் வன்முறைகள் இடம்பெற்றதாக கூறப்படும் ஒருசில தேர்தல் நிலையங்களின் முடிவுகள் நிராகரிக்கப்பட்டு அவை மீண்டும் நாடாத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment