115 தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளன.
நடைபெற்று முடிந்துள்ள பொது தேர்தலின் நிமிர்த்தம் இன்று 115 தேர்தல் வன்முறைகள் நாடுபூராகவும் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த Campaign for Free and fair Elections (CaFFE) எனும் அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பின் அதிகாரியான கீர்த்தி தென்னக்கோன் இது தொடர்பாக கூறுகையில், மேற்படி வன்முறைகள் யாவும் தேர்தல் சட்ட திட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலான வன்செயல்கள் அரசாங்கத்தின் ஆதரவாளர்களாலேயே இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கை பொறுத்தவரை வன்செயல்கள் பெரிதாக இடம்பெறவில்லை என தெரியவருகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை குறைந்தளவு மக்களே வாக்களிப்பில் பங்கு கொண்டுள்ளனர்.
1 comments :
தேர்தல் கணிப்பு:
யாழில் தொடர்பு கொண்டு அறிந்ததில் பெரும்பான்மையோர் வாக்களிக்கவில்லை என்று தெரிகிறது. அதே நேரம் கூத்தமைப்பைச் சேர்ந்த திரு.மாவை சேனாதிராஜா அவர்கள் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ள நிலையில், ஈ.பி.டி.பி சார்பு கருத்துக் கணிப்பு:
1. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) - 72 வீதம்
2. தமிழரசுக் கட்சி - 14 வீதம்
3. ஈ.பி.ஆர்.எல்.எவ் புளொட் கூட்டணி - 12 வீதம்
4. ஐக்கிய தேசியக் கட்சி - 02 வீதம்
இப்படி சொல்லும் நிலையில், தேர்தலிற்கு முன்னேயே தாம் இப்போட்டியில் தோற்க்கப்போகிறோம் என்று தெரிந்த நிலையில் (கட்டுக்காசு என்னவோ தெரியவில்லை) தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் முதலிலேயே அறிக்கைகள் மூலம் சமிக்சை காட்டிவிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் வரப்போகும் இத்தேர்தல் முடிவுகளில் என்னுடைய ஓர் கணிப்பு.
யாழ்:
கூட்டமைப்பு - 4
வெற்றிலை - 3
மெழுகுதிரி - 1
யு.என்.பி - 1
வன்னி:
கூட்டமைப்பு - 2
நங்கூரம் - 2
வெற்றிலை - 1
யு.என்.பி - 1
மட்டக்களப்பு:
கூட்டமைப்பு - 2
வெற்றிலை - 2
யு.என்.பி - 1
திருகோணமலை:
கூட்டமைப்பு - 1
வெற்றிலை - 2
யு.என்.பி - 1
அத்துடன் நாடு தழுவிய 196 கதிரைகளை பெறுவதில் வெற்றிலை பெரும்பான்மையான 120 (குறைந்தது) கதிரைகளைப் பெறும்.
கணிப்பு நேரம்: இலங்கை நேரப்படி மாலை 5.00
- அலெக்ஸ் இரவி
Post a Comment