அரசாங்கம் 107 ஆசனங்களை பெறும். இரகசிய தகவல் பிரிவு.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சி 107 ஆசனங்களைப்பெறும் என இரகசிய தகவல் சேவைப் பிரிவு அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக லங்காஈநியூஸ் இணையத்தளம் தெரிவிக்கின்றது. அவ் இரகசிய அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி 81 ஆசனங்களையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 15 ஆசனங்களையும், ஜேவிபி ஜெனரல் கூட்டான டிஎன்ஏ 7 ஆசனங்களையும் பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி கூறுகின்றது.
ஏனைய ஆசனங்களை நாடுபூராகவும் போட்டியிடும் ஏனைய கட்சிகள் பெறுமெனவும் அரசாங்கம் அரசமைப்பதற்கு போதுமான 113 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளதெனவும் அறிக்கை சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment