எக்னாலிகொடவின் மனு மே 10 ம் திகதி விசாரணைக்கு வருகின்றது.
ஜனவரி மாதம் 24 ம் திகதி தனது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது காணாமல்போன லங்காஈநியூஸ் இணையத் தளத்தின் பிரத ஆசிரியரும் கார்டுன் வரைஞருமான பிரகீத் எக்னாலிகொடவை நீதிமன்றிற்கு கொண்டுவருமாறு அவரது மனைவி சந்திய எக்னாலிகொட மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைகள் எதிர்வரும் 10ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குனர், ஹோமாகம மற்றும் கொஸ்வத்த பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் மனுவில் பிரதிதாரிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுவினை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவாரன மேன் முறையீட்டு நீதிபதி ரஞ்சித் டி சில்வா, எக்னாலிகொட எந்தவொரு சட்டபூர்வமான திணைக்களத்தாலும் கைது செய்யப்பட்டிராத நிலையில், அவரை நீதிமன்றுக்கு கொண்டுவருமாறு யாருக்கு உத்தரவிடுவது என்ற கேள்வியை மனுதாரரிடம் எழுப்பினார். நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த மனுதாரரின் சட்டத்தரணி , நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பொலிஸாரின் கடமை. எனவே எக்கலியகொடவை நீதிமன்றுக்கு கொண்டுவருமாறு பொலிஸாருக்கு உத்தரவிடவேண்டும் என்றார்.
கடந்த 22ம் திகதி இலங்கையில் 7 வது பாராளுமன்று முதற்தடவையாக கூடியபோது பாராளுன்றின் முதல்வாசலுக்கு சென்றிருந்த எக்னாலிகொட மனைவியும் அவரது புதல்வர்களும் காணமல் போன தனது தந்தையை கண்டுபிடிக்க உதவுமாறு பாராளுன்றில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் மனுக்கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment