Sunday, March 28, 2010

ஹிஸ்புல்லா FM சட்டவிரோதமானது : தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு.

கிழக்கு மாகாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இயங்கிவரும் மூன்று வானொலிச் சேவைகளும் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்தா திஸாநாயக்கவிடம், தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் முறைப்பாடு செய்துள்ளன.

காத்தான்குடி வானொலிச் சேவை மற்றும் ஹிஸ்புல்லா வனொலிச்சேவை எனப் பெயரிடப்பட்டுள்ள இருவானொலிகளும் 24 மணித்தியாலமும் சேவையில் ஈடுபட்டுவருவதாகவும் மூன்றாவது சேவை பரீட்சய சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் குறிப்பிட்டது.

இச்சேவைகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஹிஸ்புல்லாவினாலேயே நாடாத்தப்படுவதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிதக்கின்றன. இவ்வானொலிச் சேவைகள் தொலைத்தொடர்பு விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டப்பட்டள்ளது.

No comments:

Post a Comment