இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள் மூடல்
இலங்கையின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவ குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நிர்வாகங்கள் தீர்மானித்துள்ளன. பல்கலைக்கழகங்களில் சுமூக நிலையை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களை விடுதிகளிலிருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் கலாநிதி பத்மநாதனை பதவியிலிருந்து விலகுமாறு வற்புறுத்திய மாணவர் பேரவை பிரதிநிதிகளுக்கும், இதன் காரணமாக மாணவர் பேரவையை கலைக்குமாறு கோரிக்கையை முன் வைத்த மாணவர்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.
இதனால் சுமூக நிலையை ஏற்படுத்தும் வகையில் வைத்திய பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களின் விரிவுரைகளை இடைநிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டதாக பதில் துணைவேந்தர் கலாநிதி கே. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை தேர்தலின் பின்னர் இரண்டு மாணவ குழுக்களிடையே அமைதியற்ற சுழ்நிலை காணப்பட்டதாகவும் இதனையடுத்தே விரிவுரைகளை தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மன்சூர்.ஏ.காதர் கூறுகின்றார்.
0 comments :
Post a Comment