ஜெனரல் பொன்சேகாவின் உடல் நிலைமை மோசமடைகின்றது. அரசின் திட்டுமிட்ட செயல்.
ஜெனரல் பொன்சேகாவின் உடல் நிலைமை மென்மேலும் மோசமைடந்து வருகின்றபோதிலும் அரசாங்கம் அவருக்கான விசேட வைத்தியரை அனுமதிப்பதை தட்டிக்களித்து வருகின்றது என அவரின் மனைவி தெரிவித்துள்ளார். இன்று காலை அவரது இல்லத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்றை கூட்டி ஜெனரல் பொன்சேகாவின் உடல் நிலைமை தொடர்பாக விளக்கிய அவர் அங்கு கூறுகையில்,
நான் இன்று ஜெனரல் பொன்சேகாவை பார்க்கச் சென்றிருந்தேன். அவரது உடல் நிலைமை மோசமடைந்து வருகின்றது. நீதிமன்று அவருக்கான விசேட வைத்தியரை அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அரசாங்கத்தினர் அவ்வறிவுத்தல்களை கடைப்பிடிக்கின்றார்கள் இல்லை. இதுவரை ஒரு விசேட வைத்தியர் அனுமதிக்கப்டவில்லை. ஆனால் அரசாங்கம் விசேட வைத்தியரை அனுமதித்துள்ளதாக கூறுகின்றது. அச்செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.
வைத்தியரின் ஆலோசனைப்படி அவருக்கு சுவாத்தியத்திற்கு தேவையான சுத்தமான காற்று வேண்டும். இது தொடர்பாக நான் அரச அதிகாரிளுடன் பேசினேன். அவர்கள் யன்னலை மறைத்து அடைத்து வைத்திருந்த காட்போர்ட் மட்டைகளை அகற்றி வயறினாலான வலை ஒன்றை பொருத்தியிருக்கின்றார்கள் இருந்தபோதிலும் அவருக்கு போதிய காற்றோட்டம் கிடைக்கவில்லை. இதன் நிமிர்த்தமே வைத்தியர்கள் குளிருட்டியை சிபார்சு செய்தனர். குளிருட்டி சம்பந்தமாக அமைச்சர்கள் தமது வாய்களைப் பிளக்கின்றனர். குளிருட்டி ஒன்றும் சுகபோக வாழ்வுக்கானது அல்ல. அவரை சாதாரண கைதிகளுடன் ஒப்பிட முடியாது. புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அவரது நெஞ்சுப்பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது. இதனால் அவரது சுவாசத்தில் பிரச்சினைகள் உண்டு, அத்துடன் தொடர்ச்சியான விசேட வைத்திய கண்காணிப்புக்கள் அவசியம்.
0 comments :
Post a Comment