டெல்லி விமான நிலையத்தில் முழுஉடலையும் காட்டும் ஸ்கேன்
பயணிகளின் முழு உடலையும் படம் பிடித்துக்காட்டும் ஸ்கேன் சாதனங்கள் டெல்லி விமான நிலையத்தில் விரைவில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமான பயணிகள் தங்களுடன் ஆயுதம், போதை மருந்து போன்றவற்றை சட்டவிரோதமாக மறைத்து எடுத்து செல்வதைத் தடுத்து அவர்களைப் பிடிக்க வெளிநாட்டு விமான நிலையங்கள் பலவற்றில் முழு உடலையும் பரிசோதிக்கும் ஸ்கேன் கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த கருவிகள் பயணிகளை முழு நிர்வாணமாகப் படம் பிடித்துக்காட்டும். இதனால் இவற்றுக்குச் சில நாடுகளில் எதிர்ப்பு கிளம்பி இருக்கின்றன. இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் முழு உடல் பரிசோதனை ஸ்கேன் அமைக்கப்படுகின்றன. டெல்லி இந்திராகாந்தி அனைத்துலக விமான நிலையத்தில் இதை அடுத்த மாதம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இதுபற்றி விமானத்துறை மந்திரி பிரபுல் பட்டேல் பலா விவரங்களைத் தெரிவித்தார். “இந்தியாவுக்குப் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. எனவே இந்த கருவியை நாமும் பொருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நவீன பாதுகாப்பு வசதிகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வோம்,” என்று அவர் சொன்னார். “இந்த நவீன ஸ்கேன் கருவி முழு உடலையும் பரிசோதனை செய்தாலும் உடலை அருவருக்கத்தக்க முறையில் காட்டாது. எனவே கருவிக்கு பிரச்சினை இருக்காது,” என்று இந்தக் கருவி உடலை நிர்வாணமாக காட்டுவது குறித்து அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார்.
0 comments :
Post a Comment