Friday, March 12, 2010

த.தே.கூட்டமைப்பினரால் ஈழவேந்தனுக்கு கனடாவில் அச்சுறுத்தல் என்கிறது சங்கதி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும், பிரபாகரனால் கூட்டமைப்பினுள் நேரடியாக உள்நுழைக்கப்பட்டிருந்தவருமான ஈழவேந்தனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தர் குழுவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் புலிகளின் ஊதுகுழல்களின் ஒன்றான சங்கதி தெரிவிக்கின்றது.

வன்னியில் பிரபாகரன் மண்கவ்வியதை தொடர்ந்து புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமதாக்கி கொண்ட சம்பந்தன், மாவை, சுரேஸ் ஆகியோர் புலிகளியக்கத்தினால் கூட்டமைப்பினுள் உள்நுழைக்கப்பட்டோரை கதவுக்கு வெளியே தள்ளியுள்ளனர். இச்செயற்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ள ஈழவேந்தன் மேற்படி குழு சம்பந்மாக விமர்சித்துவருவாதாக தெரியவருகின்றது.

இடம்பெற இருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈழவேந்தனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தால் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்திருப்பாரா என்பது கேள்வியாகும்.

புலிகளின் அராஜகங்களை நியாயப்படுத்துவதற்கு முன்வந்தால் அவர்கள் கடந்த காலங்களில் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை செய்தவர்களாக இருந்தாலும் அவர்களை நாம் ஜனநாயகவாதிகளாகவும், தேசியத்தை மதிப்பவர்களாகவும் சித்தரிப்போம் என கங்கணம் கட்டி நின்று மண்டையன் குழுத் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரனை தமிழ் மக்களின் சிறந்ததோர் காவலன் என புகழாரம் சூட்டிய சங்கதி தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கனடாவில் அச்சுறத்தல் எனக் கூறுகின்றது.

அவ்வாறாயின் மண்டையன் குழு தற்போது கனடாவில் செயற்படுகின்றதா என்ற கேள்வி எழும்பியுள்ளது.

No comments:

Post a Comment