Friday, March 5, 2010

ஜெனரல் பொன்சேகாவின் உதவியாளரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி.

இராணுவப் பொலிஸாரின் தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் இராணவத் தளபதியும் நடந்து முடிந்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் பொன்சேகாவின் உதவியாளர்கள் தொடர்ந்து விசாரணைகளுக்கு உட்பட்டு வருகின்றனர். எதிர்வரும் சில தினங்களில் அவர் மீதான குற்றப்பத்திரிகை சிவில் மற்றும் இராணுவ நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் என அரச தரப்பிலிருந்து கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஜெனரல் பொன்சேகாவின் மருமகனின் தாயாரினால் கொழும்பு தனியார் வங்கியொன்றின் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 75 மில்லியன் ரூபாய்கள் தொடர்பாக, கொழும்பில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றின் உரிமையாளரான பிரசன்ன லியனகே டொன் சன்ஜீவ குமார என்பவரை விசாரிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவை வேண்டிய சீஐடியினர் அவர் நாட்டை விட்டு ஒடிவிட்டதாக நம்புவதாகவும், அவரை கைது செய்வதற்கு சர்வதே பொலிஸாரின் உதவியை நாடும் பொருட்டு பிடிவிறாந்து பிறப்பிக்கவேண்டும் என மன்றை வேண்டினர். சீஐடி யினரின் வேண்டுதலை ஏற்று கல்கிசை மஜிஸ்ரேட் நீதிவான் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளார்.

குறிப்பிட்ட நபரே பணத்தினை டிபென்டர் வண்டியொன்றில் வங்கிக்கு கொண்டுவந்தாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சீஐடி யினர் மன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

ஜெனரல் பொன்சேகாவில் மருமகனான தனுன திலகரத்தினவை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளதாக கூறப்படுவதுடன், அவரை தேடி இலங்கை கிறிக்கட் குழுவைச் சேர்ந்த ஹசான் திலகரட்ணவின் வீடு சோதனைக்குள்ளாகியுள்ளது. தனுன பல லட்சம் முறைகேடு செய்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹசான் திலகரத்தின இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் என்பதுடன் அவர் தனுனவின் நெருங்கிய உறவினரும் அவார். ஆவர் தற்போது அரசியலில் ஈடுபட தீர்மானித்துள்ளதுடன் ஜெனரல் ஜேவிபி இணைந்துள்ள கூட்டில் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்பதும் குறிப்பிடத்கதாகும்.

ஹசானை விசாரித்த சீஐடி யினர் தனுன மறைந்துள்ள இடம் தொடர்பாக வினாவியுள்ளனர். துனது வீட்டில் சிறிது காலங்களுக்கு முன்னர் தனுன தங்கியிருந்துள்ளதாக தெரிவித்த ஹசான் நீதிமன்றில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டபின்னர் தனது வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

அதே நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை, அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை அங்கு சென்றிருந்த போது, பொன்சேகாவுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆணைக்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தம்மால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? போன்ற விடயங்கள் குறித்து ஆராயும் நோக்கில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது. ஆணைக்குழவின் பரிந்துரையில் ஜெனரல் தங்கவைக்கப்பட்டுள்ள அறைக்கு போதிய காற்றோட்டம் மற்றும் அவருக்கான வைத்திய வசதிகள் என்பன சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

தமக்கான வசதிகளை அதிகரிக்குமாறு கோரி பொன்சேகா தாக்கல் செய்திருந்த மனுவை அடுத்தே மனித உரிமைகள் ஆணைக்குழு அங்கு சென்றது.

No comments:

Post a Comment