ஒபாமாவுக்கு ஒசாமா மிரட்டல் : மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் - அமெரிக்கா
அல் கொய்தா தலைவரும் சர்வதேச பயங்கரவாதியுமான ஒசாமா பின் லேடன், அல் கொய்தாவினர் தண்டிக்கப்பட்டால் அமெரிக்க படையினர் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளான். பில்லேடனின் சமீபத்திய கேசட் ஒன்றை அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதில் காலித் ஷேக் முகம்மது உள்ளிட்டவர்களை தண்டிக்க அமெரிக்கா முடிவு எடுத்தால் அதே முடிவை தாங்களும் எடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளான். எங்களிடம் பிடிபடும் அமெரிக்கர்களுக்கு மரண தண்டனை விதிக்க நாங்களும் முடிவு செய்வோம் என கூறியுள்ளான்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அவருக்கு முன்னாள் இருந்த அதிபர்கள் சென்ற வழியையே பின்தொடர்வதாக ஒசாமா கூறியுள்ளான். தங்கள் மீது அமெரிக்கா காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாகவும், பாலஸ்தீனத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு அளிதது வருவதாகவும் ஒசாமா தெரிவித்துள்ளான்.
கடந்த 2001ம் ஆண்டு தாங்கள் அமெரிக்காவை தாக்கும் வரையில் தாங்கள் தான் உலகின் பாதுகாவலர்கள் என்று அமெரிக்கா கருதி வந்தது என்றும் அந்த கேசட்டில் ஒசாமா பேசியுள்ளான்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பிடிபட்ட காலித் முகம்மது மற்றும் பயங்கரவாதிகள் மீது விசாரணை நடத்தி அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அமெரிக்கா கூறியிருந்த நிலையில் ஒசாமாவின் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்படி மிரட்டல் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, அல்குவைதா மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோ ம் என தெரிவித்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்து அல்குவைதா பயங்கரவாதிகளை அழிக்கும் பணியில் ஈடுபடும் என்றும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.
1 comments :
Usually I do not write on blogs, but I would like to say that this article really convinced me to do so! Congratulations, pretty nice submit.
Post a Comment