ஜனாதிபதியின் சிபார்சில் இந்திய கிரிகெட் வீரர்களுக்கு இலங்கையில் சிகிச்சை.
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் கௌதம் கம்பீர், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு மகிந்த ராஜபக்சவின் சிபாரிசின் பேரில் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் 3 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி அணியில் கௌதம் கம்பீர், ஆசிஷ் நெஹ்ராவும், இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ஷன் திலகரத்னவும் விளையாடி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கிரிக்கெட் போட்டியில் கம்பீரும், ஆசிஷ் நெஹ்ராவும் காயம் அடைந்தனர். இருவரும் காயம் அடைந்தது குறித்து இலங்கை வீரர் தில்ஷன் திலகரத்ன, மகிந்த ராஜபக்சவிடம் கூறியதையடுத்து ஜனாதிபதி அவர்கள் இருவரையும் உடனடியாக கொழும்புக்கு அழைத்து வருமாறு கூறியதுடன், இலங்கையில் மிகவும் பிரபல்யமான ஆயுர்வேத வைத்தியரான எலியந்த வைட் என்பவரிடம் மேற்படி இரு கிரிக்கட்வீரர்களுக்குமான வைத்தியத்திற்கும் சிபார்சி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை வந்தடைந்த இந்திய வீரர்களுக்கான தங்குமிட, உணவு செலவினங்கள் உட்பட வைத்தியச் செலவுகள் யாவும் ஜனாதிபதியினாலேயே பொறுப்பேற்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது.
சிகிச்சை முடிந்த பின்னர் இந்திய வீரர்கள் இருவரும் ஜனாதிபதி மாளிகைக்கு நேரில் சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தமது நன்றியை தெரிவித்துள்ளனர். அப்போது கம்பீரும், நெஹ்ராவும், தாங்கள் முழு நலமடைந்துள்ளதாகவும், விரைவில் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் ஆடவுள்ளதாகவும் தெரிவித்தார்களாம்:
ஏற்கனவே சச்சின் டெண்டுல்கருக்கும் ஜனாதிபதியின் சிபாரிசின் பேரில், மேற்படி வைத்தியரிடம் சிகிச்சை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment