கூகுள் நிறுவனத்திற்கு சீனா மீண்டும் அறிவுறுத்தல்
சீனாவின் சட்ட விதிகளுக்கு கீழ்படிந்து நடக்குமாறு பிரபல இணைய தேடுதள நிறுவனமான கூகுளுக்கு சீனா மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் செயல்படும் கூகுள் நிறுவனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளதால், சீனாவில் தனது தொழில் சேவைகளை நிறுத்திவிட்டு, அங்கிருந்து வெளியேற கூகுள் ஆயத்தமாகி வருகிறது.
கூகுளின் வெளியேற்றத்தினால் கணிசமான அன்னிய முதலீடு பாதிக்கப்படும் என்பதால், கூகுளை வெளியேறவிடவும் சீனாவுக்கு மனமில்லை. இந்நிலையில், சீனாவின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடந்தால் கூகுள் தொடர்ந்து சீனாவில் தனது தொழில் சேவைகளை தொடரலாம் என்று அந்நாட்டின் வர்த்தக துறை அமைச்சக பேச்சாளர் யாவோ ஜியான் பீஜிங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சீனாவின் சட்டவிதிகளுக்கு கீழ்படிந்து கூகுள் நடக்கும் என்று தாம் நம்புவதாகவும், அதே சமயம் அந்நிறுவனம் வேறு முடிவை மேற்கொண்டாலும் அது குறித்து தங்களுக்கு கவலையில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment