சாவகச்சேரியில் மாணவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் யார்?
சாவகச்சேரிப் பிரதேசத்தில் மாணவன் ஒருவன் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக புலிகளின் ஊடகங்கள் தமக்கே உரித்தான பாணியில் செய்தி வெளியிட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த 14ம் திகதி பிற்பகல் வீட்டிலிருந்து வெளியே தனது மோட்டார் வண்டியில் சென்றிருந்த மாணவன் பிற்பகல் வரை வீடு திரும்பியிராத நிலையில் மாணவனது பெற்றோர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கையில் அவர் தனது கையடக்க தொலைபேசியூடாக சகோதரிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, தான் கடத்தப்பட்டுள்ளதாகவும், தான் அடித்து துன்புறத்தப்படுவதாகவும், 3 கோடி ரூபா பணத்தினை கடத்தல்காரர்களுக்கு வழங்கி தன்னை விடுவித்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
மறுநாள் 15 ம் திகதி கடத்தப்பட்டவரின் சகோதரி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். தகவல்கள் எதையும் பெறமுடியவில்லை. கொழும்பில் தொலைத்தொடர்பு விடயங்களுக்கு பொறுப்பான பொலிஸ் பிரிவின் உதவி கோரப்பட்டது. கடத்தப்பட்ட இளைஞனின் தொலைபேசியுடன் உரையாடல்கள் மேற்கொள்ளப்படுவது ஒட்டுக்கேட்கப்பட்டது. உரையாடலை மேற்கொண்டவர் இனம் காணப்பட்டார், விசேட பொலிஸ் பிரிவு அவரை கைது செய்தது. கைது செய்யப்பட்ட நபர் கடத்தப்பட்ட இளைஞனின் நெருங்கிய நண்பன்.
பொலிஸாரின் விசாரணையின் போது கடத்தல் வியாபாரத்தின் சகல உண்மைகளையும் கக்கிய இளைஞன் தாம் தமது நண்பரை கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளதுடன் புதைத்த இடத்தையும் அதன் விபரங்களையும் விபரித்துள்ளார். சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இக்கொலையின் பின்னணியில் பல அதிர்ச்சி தரும் விடயங்கள் உள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான சகல உண்மைகளும் தெட்டத்தெளிவாக நீதிமன்றின் ஊடாக வெளிவரவுள்ள நிலையில் புலிகளின் ஊடகங்கள் மந்தநிலை செய்திகளை வெளியிட்டுள்ளதுடன், மாற்றுக்குழுக்கள் , ஆயுததாரிகள் என்கின்ற சொற்பதங்கள் செய்தியில் பயன்படுத்தப்பட்டு யாழ்பாணத்தில் இயங்கிவரும் ஈபிடிபி அமைப்பின் மீது குற்றச்சாட்டை சுமத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதையும் மறுபுறத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் , மாவை சேனாதிராஜா ஆகியோர் விடயத்தில் அரசியல் லாபம் தேடும் நோக்கில் கண்டன அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர்.
1 comments :
This type of criminals should be wiped out from the society.This is really a curse to the tamil society.
President should give more power to the police and bring every culprit
from the petty offence to major criminal activites to justice.Maximum punishment is the best treatment for every culprit
Post a Comment