Tuesday, March 9, 2010

பொன்சேகாவால் கைது செய்யப்பட்டுவர்களுக்கு இவ்வசதிகள் வழங்கப்படவில்லை. குலுகல்ல

ஜெனரல் சரத் பொன்சேகாவின் சேவைக்காலத்தில் பெரும் எண்ணிக்கையான இராணுவ அதிகாரிகள் இராணுவ நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்டு எவ்வித காரணங்களும் இல்லாமல் சிறிய கூடுகளில் அறைக்கப்பட்டவர்களில் சிலர் இராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர் பலர் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் விடுதலை செய்யப்படுட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் இயக்குனர் லக்ஷ்மன் குலுகல்ல அவ்வாறு சரத் பொன்சேகாவினால் கைது செய்யப்பட்டவர்கள் எவரும் இன்று சரத் பொன்சேகா கோரும் சலுகைகளை அனுபவித்திருக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

தனது மகள்மாருடன் கதைப்பதற்காக ஜெனரல் பொன்சேகாவிற்கு ஸ்கைப் வசதிகள் வழங்கப்பட்டிருந்தது. அவ்வசதிகளை கடந்த 6ம் திகதியிலிருந்து இராணுவத்தினர் வாபஸ் பெற்றனர். அதைத்தொடர்ந்து அவ்வசதி மீள அளிக்கப்படும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஜெனரல் பொன்சேகா அறிவித்திருந்தார். இதனால் எழும்பிய சர்ச்சைகள் தொடர்பாக விளக்கியபோது மேற்கண்டவாறு தெரிவித்த லக்ஷ்மன் குலுகல்ல சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்டும் இவ்வாறான வசதிகள் சலுகைகளே அன்றி அவற்றினை செய்யவேண்டும் என்ற கடமைப்பாடு இராணுவத்திற்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment