Friday, March 5, 2010

கம்போடியாவின் ஏவுகணைச் சோதனை

அண்டை நாடான தாய்லாந்துடன் நில உரிமை தகராறு நிலவி வரும் வேளையில்,கம்போடிய ராணுவம் வியாழக்கிழமை பகிரங்கமாக ஏவுகணைச் சோதனை நடத்தியிருக்கிறது. தாய்லாந்துடனான எல்லையிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலுள்ள விமானத் தளத்திலிருந்து கம்போடிய ராணுவத்தினர் 200 ஏவுகணைகளைப் பாய்ச்சினர்.

ஆனால், தாய்லாந்துக்கு எதிராகத் தங்களது வலிமையைக் காட்டிக்கொள்வது இதன் நோக்கமல்ல என்று தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் சும் சொச்சீட் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார். “இந்தச் சோதனையை மிரட்டலாகவோ அல்லது அண்டை நாடுகளிடமும் அந்நிய நாடுகளிடமும் எங்களது பலத்தைக் காட்டிக்கொள்ளவோ நாங்கள் செய்யவில்லை” என்றார் அவர்.

“நாட்டைத் தற்காக்கும் கடமையை நிறைவேற்றும் நோக்கத்துடன், நமது படைகளின் வலிமையைப் பெருக்குவதே இதன் நோக்கம்” என்று பிரதமர் ஹுன் சென் சென்ற வாரம் ஆற்றிய உரையில் கூறினார்.

பனிப்போர் காலத்தில் ரஷ்யாவிலும் சீனாவிலும் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் நெடுங்காலமாகச் சரக்குக் கிடங்குகளில் பயன்படுத்தப்படாமல் இருந்தன. அவற்றின் தரத்தைச் சோதிக்கவே ஏவுகணை சோதனை நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.

No comments:

Post a Comment