Friday, March 19, 2010

நான் சட்டத்திற்கு மேலானவன்: மகிந்த ராஜபக்ச

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சிக்காரர்ளுக்கான பிரச்சாரங்களில் இறங்கியுள்ள நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லகாமாவை ஆதரித்து கோட்டே பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டமொன்றில் பேசும்போது, 1978ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்நாட்டு அதிபரான நான் எல்லா சட்டங்களுக்கும் மேலானவன் என கூறியுள்ளார்.

1978ஆம் ஆண்டு அதிபராக இருந்த ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனா நிறைவேற்றிய அரசியலமைப்புச் சட்டம், எல்லா சட்டங்களுக்கும் மேலாக என்னை வைத்துள்ளது. எனவே என் மீது நீதித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஆனால், இந்நாட்டிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவ வீரன் மீது நடவடிக்கை எடுத்து தண்டிக்க எனக்கு அரசமைப்புச் சட்டம் அதிகாரம் அளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லகம, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி கட்டத்தில் அந்நிய தலையீடுகளை மிக நேர்த்தியாக கையாண்டுத் தடுத்தவர் என்று ராஜபக்ச புகழாரம் சூட்டியுள்ளார். ஆனால் போகல்லாக வெளிவிவகார அமைச்சுப்பதவியை பயன்படுத்தி தனது மகனுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் வேலை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்தாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com