Thursday, March 25, 2010

ஐயா சம்மந்தன் அவர்களே பழுத்த அரசியல் தலைவரே!!!

பேரினவாத கட்சிகளுக் கு ஆதரவளிப்பது இலங்கை நடத்திய படுகொலைகளை ஏற்றுக்கொண்டதாக அமைந்து விடும்: இரா.சம்பந்தன் …இல்லையேல் மகிந்த அரசு சொல்வதையும் பயங்கரவாதிகளை அழிப்பதாக சொல்லி ஆயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்களை வகைதொகையின்றி அழித்ததையும் தமிழர்களாகிய நாமே அதை சரியென ஏற்றுக்கொண்டதாக அமைந்து விடும். இதை தமிழ் மக்களாகிய நாம் புரிந்துகொண்டு எதிர்வருகின்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றியடையச் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்…. இவ்வாறு (xxx) இணையத்தில் தகவல் வந்திருந்தது அதைப்பார்த்ததும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது...

ஐயா சம்மந்தன் அவர்களே பழுத்த அரசியல் தலைவரே அப்படியாயின் தாங்கள் சரத்திற்கு ஆதரவு வழங்கியமை எதைக்குறிக்கின்றது??? சாத் சிறுபான்மைக்கட்சியினரோ??? அல்லது இத்தனை நாழும் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்குப் பூஜைசெய்தவரோ??? எப்போதும் தாங்கள் தெரியப்படுகின்ற தலைவர்கள் குற்றவாளியாகவே காணப்படுகின்றார்களளே!!! அரசியலில் பழுத்தால் மட்டுமஇ போதாது சாணக்கியம் தேவை யா!!! சாணக்கியத்திற்கு அனுபவம் மட்டும் போதாது ஆற்றலும் வேண்டும். கையில் கிடைத்த கத்தரிக்காயை சூத்தையாகும் வரை வைத்து விட்டு அதை சமைக்க முடியாது என்பதைப்போன்று இருக்கின்றது தங்கள் செயல். இலங்கையில் தமிழன் ஒருவன் அதிபராக முடியாது என்பதற்காக தமிழனுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பையே கொடுக்காத தாங்கள் இப்போது, மீண்டுமஇ நடந்த சம்பவத்தை வைத்து மக்களை தூண்டப்பார்க்கின்றீர்களா??? தேர்தல் வரும்போது வார்த்தைகளை அளவுக்கு மீறி விடாமல் செயற்படுகின்ற பணியாளர்களை வரவேற்று விழிப்புணர்வுடன் செயற்படுங்கள். இத்தனைநாழும் நாம் இழந்த இழப்புக்கள் தேவையற்றதாகிவிடக்கூடாது அதற்காக மீண்டுமஇ அதே இழப்புக்களை ஏற்படுத்த முயற்சிக்காதீர்கள். தங்களை மூத்த அரசியல் வாதி என்றே குறிப்பிட்டேனே ஒழிய சாணக்கியன் என்று குறிப்பிடவில்லையே!!! - தமிழர்களின் நிரந்தர நலன் வேண்டி அருகன்.

1 comments :

Anonymous ,  March 26, 2010 at 6:01 PM  

What has written in the statement is perfectly correct.Samapandan & co should not try to cheat the tamils again and again.It's really crime what you are trying to do to the tamils.
Please get to a side let the efficient and genuine guys do the job.We need peace,we need a peacful society.Let by gones be gones.Let sleeping dog lie.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com