அமெரிக்க மாகாண துணை ஆளுநராக தமிழர் நியமனம்.
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாண துணை ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்க அதிபர் பராக் ஒபாமா தீர்மானித்துள்ளார். அமெரிக்காவில் வாழும் தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவர் அப்பதவியில் நியமிக்கப்பட உள்ளார். இவர் ஒபாமாவின் அரசாங்கத்தில் கொள்கை திட்டமிடல் ஆலோசகராக கடமையாற்றியுள்ளார்.
இலினொய்ஸ் மாகாணத்துக்கான ஆளுநர், துணை ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. துணை ஆளுநராக ராஜா கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டால், அமெரிக்க மாகாணமொன்றில் இந்தப்பதவியை முதன்முதலில் பெற்ற தமிழர் என்ற பெருமை இவரையே சாரும்.
அதிபர் ஒபாமாவின் நீண்டகால நண்பரான ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஒபாமாவின் தேர்தல் பிரசாரங்களில் கடந்த காலங்களில் முக்கிய பங்கெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment