ராஜகிரியவில் பதட்ட நிலை உருவாகியுள்ளது.
ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்று உரையாற்றவென ராஜகிரிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கான அலங்காரங்கள் பொலிஸாரினால் கழற்றப்பட்டதை தொடர்ந்து அங்கு பதட்ட நிலை உருவாகியுள்ளது. பெருந்திரளான மக்கள் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன் திரண்டு பொலிஸாரினால் கழற்றிச் செல்லப்பட்டுள்ள பொருட்களை திருப்பித்தருமாறு ஆர்ப்பாட்டம் செய்வதாக தெரியவருகின்றது.
பொலிஸார் ஆழும்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்கட்சிக்கு ஓரு நீதி வைத்திருக்கின்றபோது நாட்டுமக்கள் எவ்வாறு பொலிஸாரை நம்ப முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிலால் லக்திலக கேள்வி எழுப்பியுள்ளார்.
0 comments :
Post a Comment