Friday, March 26, 2010

சி.பி.ஐ. யின் தேடப்படுவோர் பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய எதிரியாகக் கருதப்பட்ட பிரபாகரன் மீது இந்தியாவில் வழக்கு தொடரப்பட்டிந்ததுடன் குறிப்பிட்ட வழக்கு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

கடந்த மே மாதம் இலங்கை இராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து அதற்கான சான்றுதழை இந்திய அரசு கோரியிருந்தது.

கடந்த பெப்ரவரி 1 ஆம் தேதி பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை, இலங்கை அரசிடமிருந்து சி.பி.ஐ. பெற்றுக் கொண்டதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். தற்போது இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவான சி.பி.ஐ.- யின் இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்த புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com