பிரபாகரனின் தாய் பார்வதி வெளிநாடு : சிவாஜிலிங்கத்திடம் விசாரணையாம்.
இலங்கையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மலேசியா சென்ற வேலுப்பிள்ளையின் மனைவி பார்வதியை சிவாஜிலிங்கம் மலேசியா வரை கொண்டு சென்று விட்டுவந்தாக செய்திகள் வெளியாகியிருந்தன. இச்செயற்பாடானது இலங்கை அரசின் அனுசரணையில் யாழ்பாணத்தில் போட்டிபோடும் சிவாஜிலிங்கத்திற்காக மேற்கொள்ளப்படும் இலவச தேர்தல் பிரச்சாரமாகும். இப்பிரச்சாரத்திற்கு பிரபாகரனின் சகோதர சகோரிகளின் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளதையிட்டு சிவாஜிலிங்கத்தின் அரசியல் வஞ்சகங்கள் தெரிந்த யாழ் மக்கள் மிகவும் விசனமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து விசேட ஏற்பாடுகளுடன் இலங்கை வரவழைக்கப்பட்ட சிவாஜிலிங்கம், இலங்கை அரசாங்கத்தின் நிகழ்சி நிரலில் இயங்கிக் கொண்டிருக்கின்றார் என்பது யாவரும் அறிந்தவிடயம். இந்நிலையில் தான் வேலுப்பிள்ளையின் மனைவியை மலேசியா அழைத்துச் சென்றதற்காக தன்னை விசாரித்ததாக சிவாஜிலிங்கம் புளுடாவிட்டுள்ளார். இப்புளுடாவை இணையத்தளங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.
வன்னி முற்றாக புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டபோது மக்களோடு மக்களாக வந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த வேலுப்பிள்ளை - பார்வதி தம்பதியினரை இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக பனாகொடை இராணுவ முகாமில் தங்க வைத்திருந்தனர். அவ்வாறு அவர்களை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பதற்கான காரணம் பிரபாகரன் மீது மக்கள் கொண்ட ஆத்திரத்தில் மக்கள் அவரது பெற்றோரை தாக்கலாம் என்ற சந்தேகம் எனவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது. அவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இடைத்தங்கல் முகாம்களில் பதுங்கயிருந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் மக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
பிரபாகரன் தாய் தந்தயைருக்கு பாதுகாப்பு வழங்கிய இலங்கை அரசாங்கம், வேலுப்பிள்ளை மரணித்த நிலையில் பார்வதியை மலேசியா கொண்டு சென்றதற்காக ஒருவரை ஏன் விசாரிக்கவேண்டம். இதை நம்பும் அளவிற்கு தமிழ் மக்கள் மடையர்கள் என நினைக்கும் சிவாஜிலிங்கம் எவ்வளவு முட்டாளக இருக்கவேண்டும் என்பதை அளப்பதற்கான அளவுகோல் எங்கிருக்கின்றது?
பானாகொடை பாதுகாப்பு முகாமில் வேலுப்பிள்ளை உயிரிழந்தபோது, இலங்கை அரசாங்கத்தினை தொடர்பு கொண்ட பிரபாகரனது சகோதரிகள் தமது தந்தையின் உடலத்தை தமது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நல்லடக்கம் செய்வதற்கு உரிமை கோரியபோது, இலங்கை அரசாங்கம் அதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுத்திருந்ததுடன் அப்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சிவாஜிலிங்கத்திற்கு இலவச தேர்தல் பிரச்சாரம் செய்தபோதும் சிவாஜிலிங்கத்தால் நாடளாவிய ரீதியில் ஒன்பதாயிரம் வாக்குகளே பெறக்கூடியதாக இருந்தது. ஆனால் ஜனாதிபதி தேர்லின் போது ஜனாதிபதி வேட்பாளராக நின்ற சிவாஜிலிங்கத்திற்கு பக்கபலமாக நின்ற சிறிகாந்தா பிரபல சட்டத்தரணி என்பதும் அவர் தனது வாழ்நாளில் ஒன்பதாயிரத்திற்கு மேலதிமான வழக்குகளை வாதாடியுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் இவருடைய வாடிக்கையாளர்கள் கூட சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் இருவரும் கூட்டாக பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். நாடளாவிய ரீதியில் ஒன்பதாயிரம் வாக்கெடுத்த மகான்கள் யாழ் மாவட்டத்தில் எத்னை வாக்குகளை குவிக்கப்போகின்றார்கள்.
1 comments :
In future the tamil voters of north and east of Srilanka cannot be cheated by the bogus tamil politicians.They've learnt good lessons for more 50 years.They know very well,how they pretend before the election and how they behave after the election.Hope and pray they'll select the best,suitable and geniune youngsters to the parliament.
Post a Comment