Wednesday, March 17, 2010

ஜெனரல் பொன்சேகாவின் மீதான விசாரணை காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.


ஜனாதிபதியையும் அவர்களது சகோதரர்களையும் கொன்று, நாட்டில் இராணுவப் புரட்சி ஒன்றை ஏற்படுத்தி, ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரால் இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவிற்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன. அக்குற்றச்சாட்டுக்கள் அவர் இராணுவத்தில் சேவையில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டார், இராணுவக் கொள்வனவுகளுக்கான ஒப்பந்தங்கள் நீதிக்கு புறம்பாக அவரது உறவினரான தனுன திலகரட்ட என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதாகும்.

இவ் ஏழு குற்றச்சாட்டுக்களும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இராணுவ நீதிமன்றில் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், விசாரணைகளுக்காக இராணுவத் தளபதியினால் இராணுவ மேஜர் ஜெனரல்கள் மூவர் கொண்ட இராணுவ நீதிமன்று ஒன்று அமைக்கப்பட்டது, அவ் நீதிமன்று நேற்று கூடியதுடன் அதன் விசாரணைகள் எதிர்வரும் எப்பரல் 6ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இரண்டாவது விசாரணைகள் அதே நீதிபதிகள் தலைமையில் இன்று ஆரம்பமானபோது, ஜெனரல் பொன்சேகா சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் நீதிபதிகள் தொடர்பாக தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

குறிப்பிட்ட 3 நீதிபதிகளில் ஒருவர் இராணுவத் தளபதியின் மைத்துனர் , ஒருவர் குற்றச்செயல் ஒன்றுக்காக ஜெனரல் பொன்சேகாவினால் தண்டிக்கப்பட்டு பதவியிறக்கப்பட்டவர், மூன்றாமவர் இராணுவ ஏல விற்பனை ஒன்று தொடர்பாக குற்றவாளியெனக் நிருபிக்கப்பட்டவர் என தெரிவித்த சட்டத்தரணிகள் நீதிபதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துடன், ஜெனரல் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இராணுவ நீதிமன்றில் விசாரிக்க முடியாது எனவாதிட்டனர்.

இவ்வாதங்களை அடுத்து இவ்நீதிமன்ற தொடர்ந்தும் இயங்குவது தொடர்பாக மீள்பரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் விசாரணைகளை காலவரையறையின்றி ஒத்தி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment