Monday, March 29, 2010

வணக்கம் எம் இனிய தமிழ் மக்களே! -வன்னியான்.

தேர்தல் நெருங்கிவிட்டது ,நன்றாக நொறுக்கியும்தான் போட்டார்கள். நாம் இன்னும் மாறவில்லை . எவர் றீல் விட்டாலும் அவர்தான் எங்கள் தலைவர்.எவரையும் நாம் அண்டிப்பிளைப்பு நடத்துவோம். எவர் என்ன சொன்னாலும் ஆராய மாட்டோம். அவர் வாக்கே தெய்வ வாக்கும் என்போம். சிந்தனை துளியும் என்போம் .ஒரு துளி சிந்தனை மட்டும் எமக்கு இளைத்த துன்பம்தான் எத்தினை .

இந்த பூவுலகில் நாம் மட்டும்தான் புத்திசாலிகள் என எண்ணி இருந்தோம். எத்துணை ஈனத்தனமான காரியங்கள் எம்மீது எம்மவரால் புரியப்பட்டது. எப்போதாவது எதிர்த்த ஞாபகமுண்டா? யார்யாரோ எம் மீது உட்கார்ந்து சவாரிசெய்ய நாம் என்ன எமதர்மனின் வாகனமா. அப்படித்தானே இந்த தலைவர்கள் இதுவரை எம்மை பார்த்தார்கள். அன்று தொட்டு இன்றுவரை எம்மை ஆண்டுவிட்டு எல்லாரும் சென்றுவிட்டார்கள். புதிதாக பலர் வருகிறார்கள். அவர்களும் சவாரி செய்யும் நோக்கில் தான் வருகிறார்கள்.

என் இனிய மக்களே இன்றுவரை நாம் திரும்பி திரும்பி ஓடி இருக்கிறோம். நாம் நடந்த சுவடுகளை சற்று திரும்பி பாருங்கள். முடியவில்லையா? வாருங்கள்! கூட்டிசெல்கிறேன். உங்களை விட்டுவிட்டு நான்மட்டும் தப்பிசெல்ல முயலமாட்டேன். அப்படி வாழ்ந்தவர்கள் இன்று உயிருடன் இல்லை. இருப்பதாக பலர் கூறகேள்விப்பட்டேன். அந்த பலரிடம் ஒருகேள்வி கேட்க ஆசைபடுகிறேன் "எம்மையும் எம்மினதையும் நூறு வருடங்களுக்கு பின்தள்ளிய அந்த நாய்கள் இருந்தால் என்ன அழிந்தால் என்ன? இவர்களா எமக்கு விடுதலை வேண்டித்தர போகிறார்கள். கத்தியை மட்டும்தான் தீட்டினார்களே ஒளிய புத்தியை தீட்டினார்களா என்றால் இல்லை. (அது அவர்களிடம் இல்லை. மக்களாகிய எம்மிடமும் அது இல்லை போல்தான் இருக்கிறது )"

வரலாற்று தவறு, வரலாற்று தவறு என்று வாய்கிழிய சொல்கிறார்களே! என்ன சொல்கிறார்கள் என விளங்குகிறதா? ஆம் அன்று கோட்டை ,கொடி கொத்தளங்களுடன் இருந்து எம்மீது ஆதிக்கம் செலுத்தியவர்கள் இன்று இல்லை. அவர்களின் தரைப்படை,யானைப்படை ,பீரங்கிப்படை ,விமானப்படை ... இன்று அவர்களே இல்லை. ஆம் மக்களே! நாமும் அந்த வரலாற்று தவறை செய்தோம் ,செய்துகொண்டு இருக்கிறோம்.
அவர்கள் சொன்னதற்கெல்லாம் கோவில்மாடு மாதிரி தலை ஆட்டினோம். ஒரு சொல்லுதன்னும் ஏன் என்று கேட்டிரோம். இனியும் இந்த நிலை தொடர்ந்தால் .. அவர்கள் ஆண்ட வடக்கும், சரி கிழக்கும் இன்று சாம்பல் மேடு. வவுனியாவை சற்று சிந்தியுங்கள் அவர்கள் இங்கும் இருந்திருந்தால் இன்று வவுனியாவும் அதில் இருக்கும் நாமும் இன்று அழிந்திருப்போம். இந்த வவுனியா நினைத்துகூட பார்க்க முடியாது. இன்று எம்மை வாழ வைத்து தம்மை , தம் இன்னுயிரை ஈந்த அந்த தியாகிகளை சிந்தியுங்கள். அன்றில் இருந்து இன்று வரை எம்முடன் கலந்து வாழும் அவர்கள் மட்டும் தான் என்றும் கூட வருவார்கள்.

அன்பான தமிழ் மக்களே! D.P.L.F, அதன் சின்னம் நங்கூரம். அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டுமே எமது தெரிவாகும். இது தான் எமது வரலாற்று கடமை. நன்றி மறந்த தமிழர் நாமல்லோம் இதை உணர்த்துவோம். அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே இதை உணர்த்துவோம் மடையர் வழிவந்த மாந்தர்க்கு. நன்றி.

நலன்விரும்பிகள் சார்பாக. வன்னியான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com