Sunday, March 28, 2010

களுகங்கையில் வீசப்பட்ட குழந்தையின் தாய் மீது கொலைக் குற்றச்சாட்டு.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது குழந்தையை கங்கiயில் தாய் ஒருவர் வீசிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. வாகனச்சாரதி ஒருவரால் கங்கையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் இருநாட்களின் பின்னர் குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருந்தது யாவரும் அறிந்ததே.

ஐந்து குழந்தைகளுக்கு தாயான மானல் புஸ்பலாதா தனது கடைசி மகனான 3 வயதுடைய அமில் சந்தறுவானை கங்கையில் வீசியது வறுமையின் காரணமாகவே என தெரிவித்திருந்தார். சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த வீட்டுத் திட்டம் ஒன்றில் வாழ்ந்து வந்த அவரது கணவன் மதுவிற்கு அடிமைப்பட்டிருந்தாகவும் குழந்தைகளை வழர்ப்பதற்கு எவ்வித வருமானமும் தனக்கு இல்லை எனவும் அவர் மேலும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தாய் மீது கொலைக் குற்றஞ்சுமத்தியுள்ளனர். ஒருவர் வறுமையில் இருந்தால் தமக்கு போதிய வருமானம் இல்லை என்பதை நிருபித்து அரச செலவில் இயங்கும் பராமரிப்பு நிலையங்களில் அல்லது பொதுவான சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் குழந்தைகளை பாரமளித்திருக்க முடியும் என தெரிவித்த களுத்துறை நீதிபதி இவ்விடயத்தினை குறிப்பிட்ட தாய் செய்யத் தவறியமை தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் ஒன்றினை பெறுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பிட்ட தாய் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரிடம் நாளை வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது எஞ்சிய நான்கு குழந்தைகளையும் அவர் நீதிமன்றிடம் பாரமளித்ததுடன் குழந்தைகள் நீதிமன்றினூடாக அரச சிறுவர் பராமரிப்பு நிலையத்திடம் பாரமளிக்கப்பட்டுள்ளனர். தகப்பன் தலைமறைவாகியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com