உணவில் நஞ்சு? சிறார்கள் பாதிப்பு
இருட்டுச்சோலைமடு அரசாங்க பாடசாலையின் உணவை உட்கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாடசாலை இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகருக்கு மேற்கே வவுனதீவு பிரதேசத்தில் இருக்கிறது.
பாடசாலையால் வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட பின்னர் இந்தச் சிறார்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழோசையின் மட்டக்களப்புச் செய்தியாளர் கூறுகிறார். வாந்தி, மயக்கம் காரணமாக இந்தச் சிறார்கள் மட்டக்களப்பு அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் டாக்டர் கே முருகானந்தம் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துச் சிறார்களும் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு அல்லது அவர்கள் அருந்திய நீரில் நச்சுத்தன்மை கலந்திருக்கக் கூடும் என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும் டாக்டர் முருகானந்தம் கூறுகிறார்.
எனினும் சோதனைக்காக அனுப்பபட்டுள்ள நீர் மற்றும் உணவு குறித்த அறிக்கை கிடைத்த பிறகே இந்தச் சம்பவத்துக்கான உறுதியான காரணம் குறித்து தெளிவாகக் கூற முடியும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
Thanks BBC
0 comments :
Post a Comment