டக்ளஸ் லப்டொப் கொடுக்கிறாராம்..
வடக்கின் வசந்தத்தின் கீழ் பள்ளிமாணவருக்கு கையடக்கணனி! இது தேர்தல் சூதாட்டமா அல்லது மீள்கட்டுமானத்தின் படிமானமா! வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் பள்ளிமாணவருக்கு மடி கணனிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் காலம் நெருங்கி வருவதால் வடகிழக்கில் அபிவிருத்திகள், மீள்கட்டுமானங்கள், திறப்பு விழாக்கள் என தடல்புடலாக நிகழ்வுகள் அரங்கேறிவருகின்றன. இவையெல்லாம் தேர்தலை குறியாக கொண்டுதான் வேகம் பெறுகின்றதா? உண்மையாகவே மக்களின் நலனை கொண்டுதான் இவை இடம்பெறுகின்றதா? தேர்தல் நெருங்கும்போது திகதியிடப்பட்ட காசோலைகளை வழங்குவதும், தேர்தலின் பின்னர் அவ் கசோலைகளில் பணம் இல்லாதுபோவதும் கடந்தகால நிகழ்வுகளாக இடம்பெற்றன.
ஆகவே அபிவிருத்திகள், திறப்பு விழாக்கள், நன்கொடைகள், உதவிகள் எமது மக்களுக்கு தேவையானவைதான். அவற்றை வழங்குவதும் நடைமுறைப்படுத்துவதும் வரவேற்கக் கூடியதுதான். இவையெல்லாம் தேர்தல் நெருங்கும்போது சூடுபிடிப்பதுதான் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. 30 ஆண்டுகால யுத்தத்தினால் எந்தவொரு அபிவிருத்தியையும் காணாத வடகிழக்கு மாகாணம் அபிவிருத்தியில் புத்துயிர் பெறுவது வரவேற்கப்பட வேண்டியதுதான். இது தேர்தலுடன் மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெற்கே மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் போன்று வடக்கு அபிவிருத்தியும் செழிப்புற வேண்டும். அதுவே பாராளுமன்றிற்கு தெரிவு செய்யும் மக்களிற்கான நன்றியுணர்வாகும்.
யாழ்ப்பாணத்திலிருந்து..
ஆர்.தர்மரட்ணம்.
0 comments :
Post a Comment