இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
எதிரி நாட்டு ஏவுகணகளை வானிலேயே தடுத்து தாக்கி அழிக்கும் இந்தியா வின் நவீன ஏவுகணை (Advanced Air Defence missile) சோதனை இன்று தோல்வியில் முடிந்தது. ஒரிஸ்ஸா மாநிலம் பாலசூர் அருகே உள்ள வீலர்ஸ் தீவில் உள்ள இந்திய ராணுவ ஆராய்ச்சி மையத்தில் இன்று இந்த சோதனை நடந்தது.
இந்த சோதனையின்போது முதலில் பிருத்வி ரக ஏவுகணை 10.02 மணிக்கு ஏவப்பட்டது. இந்த ஏவுகணை வங்கக கடலின் மீது பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் இதை வானிலேயே தடுத்து அழிக்கும் interceptor ஏவுகணையை செலுத்த முயற்சிக்கப்பட்டது.
ஆனால், இந்த ஏவுகணை ஏவு வாகனத்தில் இருந்து கிளம்பவே இல்லை. அந்த ஏவுகணை டேக்-ஆபே ஆகவில்லை. இதனால் இந்த ஏவுகணை சோதனை தோல்வியைத் தழுவியது.
இது குறித்து ராணுவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கூறுகையி்ல், பிருத்வி ஏவுகணை தனது பாதையில் இருந்து விலகிச் சென்று கடலில் விழுந்துவிட்டது. இதனால் தான் இந்த ஏவுகணையை எதிர்கொண்டு அழிக்க, எதிர்ப்பு ஏவுகணைக்கு உரிய கமாண்ட் கிடைக்கவில்லை. இதனால் தான் அந்த ஏவுகணை டேக் ஆப் ஆகவில்லை என்றனர்.
15 முதல் 20 கி.மீ. தூரத்தில் வைத்து பிருத்வி ஏவுகணையை இந்த எதிர்ப்பு ஏவுகணை தாக்கி அழிக்கும் வகையில் சோதனை திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த சோதனையை நேற்றே நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறுகளால் சோதனை ஒத்தி வைக்கப்பட்டு இன்று நடத்தப்பட்டது.
0 comments :
Post a Comment