Wednesday, March 31, 2010

பெனாசிர் படுகொலை: விசாரணை அறிக்கையை தடுத்தார் சர்தாரி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிடுவதை ஐ.நா. செயலர் பான் கி மூன் தாமதப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் அரசின் வேண்டுகோளை ஏற்றே பான் கி மூன் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.

ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டால் வன்முறை வெடிக்கும் என்ற அச்சம் காரணமாக,பாகிஸ்தானிலுள்ள அனைத்து ஐ.நா. அலுவலகங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரத்திற்கு பின்னரே, விசாரணைக் குழு அறிக்கை தாமதமாக வெளியிடப்படும் என்று பான் கி மூன் அறிவித்தார்.

முன்னதாக ஐ.நா. விசாரணைக் குழு இன்று தனது அறிக்கையை பான் கி மூனிடம் அளித்த நிலையில், அதனை வருகிற ஏப்ரல் 15 ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம் என்று பாகிஸ்தான் அதிபர் சர்தாரி அவசரமாக கேட்டுக்கொண்டார். அதே சமயம் அதற்கான காரணம் எதையும் சர்தாரி தெரிவிக்கவில்லை.இத்தகவலை ஐ.நா. பேச்சாளர் மார்ட்டின் இன்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment