Sunday, March 21, 2010

அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் : அமெரிக்கா, ரஷ்யா ஏப்ரலில் கையெழுத்து

அமெரிக்கா, ரஷ்யா இடையே மிக முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் கையெழுத்தாகவுள்ளது. இத்தகவலை ரஷ்யாவில் இருந்து வெளியாகும் கோமர்சண்ட் நாளிதழ் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

செக்கோஸ்லோவாகியா தலைநகரில் கையெழுத்தாகவுள்ள இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனும், ரஷ்ய அயலுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவும் கையெழுத்திட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க, ரஷ்யத் தலைவர்கள் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment