Monday, March 29, 2010

நித்தியானந்தாவின் ரகசியங்களைச் சொல்லத் தயார் - கோர்ட்டில் லெனின் கருப்பன் மனு.

சாமியார் நித்தியானந்தா தொடர்பான ரகசியங்களைச் சொல்ல விரும்புவதாகவும், அதற்கு அனுமதிக்குமாறும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். வக்கீல் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நித்தியானந்தா மீதான வழக்குகளின் விசாரணையை கர்நாடகாவுக்கு மாற்றி விட்டனர். இதில் உள் நோக்கம் இருப்பதாக கருதுகிறேன். எனவே நித்தியானந்தா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் அந்தரங்கமாக இருந்ததை வீடியோவி்ல் படம் பிடித்து வெளியிட்ட லெனின் கருப்பன் சார்பில் அவரது வக்கீல், தியாகராஜன் ஆஜரானார்.

நீதிபதியிடம் அவர் கூறுகையில், நித்யானந்தா சாமியார் தொடர்பான சில விபரங்களை லெனின் கோர்ட்டில் தெரிவிக்க விரும்புகிறார். எனவே எங்கள் தரப்பையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு ஏப்ரல் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment