Monday, March 15, 2010

த.தே.கூ தமிழீழ கோரிக்கையை கைவிட்டு விட்டதாக பிபிசி அதிருப்தி.

இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களின் மிகப்பெரிய கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டுள்ளதாக பி.பி.சி செய்திசேவை தெரிவித்துள்ளது. தனிநாட்டுக்குப் பதிலாக “கூட்டாட்சி” முறைத் தீர்வை அவர்கள் விரும்புவதாகவும், தமிழ் மாகாணங்களான வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைத்து முக்கியமான அதிகாரப் பரவலாக்கல்களைத் தரவேண்டுமென்பதே த.தே.கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் த.தே.கூட்டமைப்பு, விடுதலைப் புலிகளின் ஒரு பிரதிநிதியாகவே பார்க்கப்பட்டு வந்தது.தமிழ் மக்களுக்குத் தனிநாடு வேண்டும் என்ற கொள்கையுடன் 1970 களிலிருந்து போராடும் விடுதலைப் புலிகளின் வழியிலேயே இவர்களும் பின்பற்றிச் சென்றனர்.

ஆனால் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு 10 மாதங்களுக்குப் பின்னர் இப்போது, த.தே.கூ ஆனது தமது கொள்கையிலிருந்து மாறியுள்ளது.

இவர்களின் தேர்தல் அறிக்கை, கூட்டாட்சி அமைப்பில் அதிகார பரவலாக்கலை வலியுறுத்துகிறது. அதோடு உள்ளூரிலுள்ள தமிழர்கள் மற்றும் தனிநாடு வேண்டும் எனக் கோரும் வெளிநாடு வாழ் தமிழர்களிற்கிடையிலான முரண்பாட்டையும் இது எடுத்துக்காட்டுகிறது என பி.பி.சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment