தனுனவை தேடும் படலம் தொடர்கின்றது. டிஎன்ஏ வேட்பாளரிடம் விசாரணை.
ஜெனரல் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்ணவை தேடும் படலம் தொடர்ந்து கொண்டு செல்கின்றது. அவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் தனுனவிற்கு புகலிடம் வழங்குதல் தண்டனைக்குரிய குற்றம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தனுனவைத் தேடும் விடயம் எதிர்கட்சி செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளை முடக்கும் ஓர் உத்தியாக பயன்படுத்தப்படுவதாக அவதானிக்கப்படுகின்றது. எதிர்கட்சியைச் சேர்ந்த பலர் தனுன தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களது அரசியல் செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
ஜனநாயக தேசிய முன்னணியின் காலி மாவட்ட வேட்பாளரான கஜபா பிட்டிகல நேற்று சீஐடி யினரால் 9 மணித்தியாலங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணைகளின்போது அவர் தனது அவிஸாவளை விடுதியில் தனுனவிற்கு தங்க இடம் கொடுத்தாரா? துனுன எங்கிருக்கின்றார் என்ற விடயங்கள் வினவப்பட்டுள்ளது.
தனது விடுதியில் சில மணி நேரங்கள் தனுன தங்கி விட்டுச் சென்றதாக சீஐடியினருக்கு தெரிவித்த பிட்டிகல விடுதி ஒன்றை வைத்திருக்கும் தனது தொழில் அதுவெனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒழிந்து கொள்வதற்காக வீசேடமாக பயிற்சிவிக்கப்பட்டு அதி நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் உதவியுடன் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் செயற்பட்டுவந்த புலிகளை மடக்கிப்பிடித்த இலங்கைப் புலனாய்வுத் துறையினருக்கு தனுனவை கைது செய்ய முடியவில்லை என தெரிவிப்பது பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது போன்றதேயாகும்.
0 comments :
Post a Comment