புலிகளுக்கு தகவல் வழங்கிய உதவி பொலிஸ் பரிசோதகர் கைது.
நீண்ட காலங்களாக புலிகளின் புலனாய்வுத் துறையினருடன் இணைந்து செயற்பட்டு புலிகளுக்கு பல தகவல்களை வழங்கி வந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றில் எடுக்கப்பட்டபோது சந்தேக நபர் புலிகளுக்கு கொழும்பு துறைமுகம் மற்றும் பொலிஸ் தலைமையகம் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மன்றுக்கு தெரிவித்தனர்.
சந்தேக நபர் சேவையில் இருந்து கொண்டு புலிகளின் காவல்துறையில் இணைவதற்கு விண்ணப்பித்திருந்த விண்ணப்பப்படிவம் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்தே பல உண்மைகள் வெளிவந்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளின் ஆவனக் கோவையிலிருந்தே இவரது விண்ணப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பபடிவத்தில் அவரது புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்துள்ளது. இவ்விடயம் தெரியவந்தவுடன் இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு தப்பியோடியிருந்த அவர் இலங்கை திரும்பியபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரது கையொப்ப பிரதியையும், புலிகளின் ஆவனக்கோவையிலிருந்த கைப்பற்றப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்திலுள்ள கையொப்பத்தையும் பகுப்பாய்வுக்கு அனுப்புமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment